ஆரையம்பதி பகுதியில் விபத்து - நபர் ஒருவர் பலி!
#SriLanka
#Batticaloa
#ADDA
#ADDAADS
#ADDAFLY
Thamilini
17 hours ago
கல்முனை - மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லாரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி, சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
