நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையில் சிறிய மாற்றம்!
நாட்டைச் சுற்றியுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து நீடிக்கும் என்றும், இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
