Double cabs வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
Double cabs வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு!

அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். 

 டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தலா ரூ. 100 மற்றும் 120 என வரி விதிக்கப்படுவதாகவும், தனது கட்சியைப் பராமரிக்க டபல் கெப்(Double cabs) வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார். 

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி Double cabs வாகனங்களை வாங்குவதற்கு தனது கட்சியினருக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் சர்க்கரை வரி மோசடியை விட ஏழு முதல் எட்டு மடங்கு பெரிய வரி மோசடியைச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

 Double cabs வண்டிகளைப் போன்ற வசதிகளைக் கொண்ட வாகனங்களுக்கு 200% வரி விதித்து, விலக்கு அளிப்பதன் மூலம், நாடு பெருமளவு வரி வருவாயை இழக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சர்க்கரை வரி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அதே நபர்கள் அதையே செய்வது வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மக்களுக்கு அரிசிக்கு ஒரு கிலோ ரூ. 65வும், உப்புக்கு ஒரு கிலோ ரூ. 40தும், டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தலா ரூ. 100 மற்றும் 120 என வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!