உழவு இயந்திரம் கவிழ்ந்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு!
#SriLanka
Mayoorikka
1 hour ago
பொலனறுவை – மனம்பிட்டிய பகுதியில் நடந்த துரதிஷ்டவசமான விபத்தில், தாத்தாவுடன் வயலிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் திடீரென சீரிழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த தாத்தா தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் பி.ஜி.எஸ்.ஜி. அரியரத்ன தலைமையில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வு கிராமத்தினரிடையே பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
