இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை! சீரழியுமா இலங்கை

#SriLanka
Mayoorikka
2 hours ago
இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை! சீரழியுமா இலங்கை

இலங்கையில் அண்மைக்காலங்களில் பாலியல் தொழில் நாடாளாவிய ரீதியில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

 இந்த நிலையில் பாலியல் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளனர். அந்தவகையில் சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சட்ட மற்றும் சமூக அங்கீகாரத்திற்காக ஒரு பொதுவான பதாகையின் கீழ் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளனர்.

 பாலியல் தொழிலாளர்கள் கைதுகள், சமூக பாகுபாடு மற்றும் பிறருக்கு அரசாங்க நலத்திட்ட சலுகைகளை எதிர்கொள்வதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று இயக்குனர் எச். ஏ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பாலியல் தொழிலாளர்களின் அமைப்பு என்று அவர் கூறினார்.

 கொழும்பு, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இதில் இணைந்துள்ளனர்.

 பொருளாதார நெருக்கடி, விவாகரத்து, பாலியல் வன்கொடுமை, கடத்தலுக்கு ஆளாகுதல் போன்ற காரணங்களால் பெண்கள் இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை மேற்கத்தேய சில நாடுகளில் பாலியல் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துஷ்பிரயோகங்களை தடுக்கலாம் என அவர்கள் எண்ணுகின்றனர்.

 ஆனால் ஆசியாவை பொறுத்தவரையில் இது ஒரு குற்றச் செயலாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறு தொழில் செய்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறித்த பாலியல் தொழிலார்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பினை உருவாக்கியமை இளங்காலையில் பாலியல் தொழிலை அங்கீகரிக்க மறைமுக கோரிக்கை விடுக்கின்றமையை குறிக்கின்றது.

 அவ்வாறு அங்கீகரித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளான சீர்கேடுகள், குற்றச் செயல்களை இலங்கை எதிர்கொள்ளுமா என்பதும் கேள்விக் குறியே? இதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!