ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதித்த நாடு: இளைஞனான ஜனாதிபதியின் அதிரடி முடிவு
உலகளவில் நடக்கும் அதிகளவிலான குற்றங்கள், துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்றன இணையங்களில் வரும் ஆபாச படங்களை பார்த்து விட்டு நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
இவாறான நிலையில் ஆபாசமாக பேசுதல், உடை அணிதல் போன்றன குற்றச் செயல்கள், துஷ்பிரயோகங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கின்றன.
இந்த நிலையில் புர்கினா பாசோ என்ற நாட்டில் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது.
குடிமக்கள் இனி இந்த தளங்களைப் பார்வையிட முடியாது. ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரேரே நாட்டை மறுசீரமைக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இளைஞர்களை ஆபாசமான உள்ளடக்கத்திற்கு வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "இணையம் கற்றல், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும்.
தீங்கு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வதற்கு அல்ல. நாம் நாட்டின் தார்மீக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவிததுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையிலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு ஆபாச வலைத்தளங்களை தடை செய்வதன் மூலம் குற்றச்செயல்களையும் துஷ்பிரயோகங்களையும் தடுக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.
புர்கினா பாசோ நாட்டின் இளைஞனான ஜனாதிபதியால் செய்ய முடிந்ததை இந்த நாட்டின் அனுரகுமார திஸாநாயக்கவினால் செய்யமுடியுமா?
(வீடியோ இங்கே )
அனுசரணை
