' சீரற்ற காலநிலையினால் பல நாள் மீன்பிடி படகு!
#SriLanka
Mayoorikka
2 hours ago
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் குளிர்ச்சியான சூழல் காணப்படுவதுடன் அடிக்கடி மழை பெய்வதுடன் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் தளம்பல் ஏற்பட்டுள்ளதுடன் கடல் ,நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாய செய்கையில் ஈடுபடும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக பல நாள் கடலில் நங்கூரமிட்டு மீன்பிடியில் ஈடுபடும் படகு ஒன்று காரைதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை காற்றின் வேகம் காரணமாக இன்று காலை காரைதீவு கடலோரத்தில் தரை தட்டியுள்ளது.
இதன் போது பிரதேச வாழ் மக்கள் ஒன்றிணைந்து தரை தட்டிய பல நாள் மீன்பிடி படகினை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தரை தட்டிய படகினை பொதுமக்கள் குழந்தைகள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
