பருத்தித்துறை நகரசபை மரக்கறி சந்தை தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி!
பருத்தித்துறை நகரசபை மரக்கறி சந்தையை, மீண்டும் பருத்தித்துறை நகரின் நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு தவிசாளரால் பருத்தித்துறை பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் புதிய சந்தையிலிருந்து வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதிக்கு மாறிவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் வர்த்தகர்கள் மீண்டும் புதிய சந்தை தொகுதிக்கு செல்லமாட்டோம் என்ற அடிப்படையில் புதிய சந்தையை நேற்று மதியத்திலிருந்து மூடுவதாக அறிவித்த நிலையில் புதிய சந்தையிலிருந்து எஞ்சிய ஐந்து வியாபாரிகளையும் பழைய இடத்திற்கு மாற்றுமாறு கோரி தவிசாளரின் முறைப்பாடு காணப்பட்டது
பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது , நீதிமன்றத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை வழக்கை பதிவு செய்யும் வரை தற்காலிகமாக புதிய சந்தையை திறக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தையை திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத புதிய சந்தை வியாபாரிகள் பொலிஸாரில் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
