118 மேலதிக வாக்குகளால் என்பிபி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்!

#SriLanka #budget
Mayoorikka
1 hour ago
118 மேலதிக வாக்குகளால் என்பிபி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தின் போதே குறித்த வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. 

 நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அண்மையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. குறித்த வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. தமிழ் முற்போக்கு கூட்டணி இதற்கு ஆதரவாக வாக்களித்தது. 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் காரணமாக இந்த ஆதரவு வழங்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் உபதலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மார் சபையில் அறிவித்தனர்.

 இதற்கிடையே தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 

 ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் 2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமானதாக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

 வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!