இளஞ்செழியனுக்கு அரசியலில் இறங்கும் விருப்பம் இருந்தால்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விருப்பம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக கருத முடியாது.
இளஞ்செழியனுக்கு அரசியலில் இறங்கும் விருப்பம் இருந்தால் அதை முதலில் இலங்கையில் வாழும் தமிழர்களிடம் வெளிக்காட்டியிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள ஒரு பிரிவினரிடமிருந்து ' சேர்டிபிக்கேட் ' எடுத்துவந்து சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தலைமைதாங்க நினைப்பது முறையானதல்ல.
அத்துடன் அவருக்கு அரசாங்கம் பதவியுயர்வு வழங்கவில்லை என்பதற்காக வடமாகாணத்தின் முதலமைச்சராக்கி இழப்பீடு செய்ய வேண்டிய எந்த பொறுப்பும் தேவையும் தமிழர்களுக்கு இல்லை. முதலில் அவர் மாகாணசபை முறையைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
முன்னர் ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரை அரசியலுக்கு கொண்டுவந்து மாகாணசபையை கேலிக்கூத்தாக்கியதைப் போன்று இப்போது ஒரு கவலையுடன் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியை அரசியலுக்கு கொண்டுவந்து இருப்பதையும் கெடுத்துவிடக்கூடாது//-
நன்றி
முகநூல் -Veeragathy Thanabalasingham .
(வீடியோ இங்கே )
அனுசரணை
