அர்ச்சுனா பாராளுமன்ற பதவியிலிருந்து விலகக் கூடாது: தொடர்ந்தும் இருக்கவேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க வேண்டும்.
ஏனெனில் அவர் வட மாகாண முதலமைச்சராக வருவது என்பது பகல் கனவு ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டால் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விடும்.
இந்தக்கால சூழ்நிலையில் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்கு தேவையான ஒருவராக இருக்கின்றார். கேள்விகளை கேட்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஆதாரங்களை திரட்டி அவர்கள் செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதற்கு போர்ச்சுனாவினால் தான முடியும்.
தமிழ் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சாய் சிங்கள அரசியல்வாதிகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் கேள்வி கேட்கும் ஒரே ஒருவர் அதனால் அவர் பாராளுமன்றத்திற்கு தேவையான ஒருவராக அர்ச்சுனா இருக்கின்றார்.
அர்ச்சுனா பராளுமன்றத்திற்கு வெளியில் வந்தால் தமிழ் அரசியல்வாதிகள் விலை போகக் கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே உள்ளது.
இந்தநிலையில் அவரை வெளியேற்றுவதற்கு அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கின்றார்கள். அவரை வெளியேற்றி முதலமைச்சர் தேர்தலில் தோல்வி பெற வைத்து நடு தெருவில் நிறுத்தவே அனைத்து இலங்கை அரசியல்வாதிகளுக்கும் திட்டம்.
இவர் ஆளும் கட்சிக்கு கூட அர்ச்சுனா பாராளுமன்றில் ஒரு இடையூறான நபராக இருக்கின்றார்.
குறிப்பு: #lanka4 நாம் யாருக்கும் ஆதரவும் இல்லை. எதிரியும் இல்லை. காரணம் இலங்கை அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஒரு துரும்புகூட எடுக்க முடியாது.
எல்லோரும் தன்னலவாதிகள். ஆனால் அர்ச்சுனா பொய்யனா? நல்லவனா? கெட்டவனா? நாமலில் ஆதரவா இதுவெல்லாம் எமக்கு தேவை இல்லை. ஆனால் கட்டாயம் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தேவையான ஒருவர். வட மாகாண முதலமச்சராக அவரால் வெல்ல முடியாது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
