தமிழின மாவீரர்களின் தியாகத்தை சிங்களவர்கள் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்களா? சூரி சின்னத்துரை கேள்வி

#SriLanka #Tamil #Soldiers #Media #Sinhala
Prasu
1 hour ago
தமிழின மாவீரர்களின் தியாகத்தை சிங்களவர்கள் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்களா? சூரி சின்னத்துரை கேள்வி

எங்கேயாவது ஒரு சிங்கள ஊடகம் அல்லது ஒரு சிங்கள இனத்தவர் தனது சமூக வலைத்தளத்தில் எமது மாவீரர் பற்றியும் அவர்களுக்கு தமிழர்கள் ஓன்றுகூடி வணக்கம் செலுத்துவது குறித்தும் எப்போதாவது பேசியதுண்டா? எழுதியதுண்டா?

தமிழினத்தின் அந்த வீரர்களின் தியாகத்தை புகழ்ந்து அல்லது நியாயப்படுத்தி அல்லது மதித்து அல்லது ஏற்றுக்கொண்டு எழுதுவதுண்டா?

சரி, மதித்தோ, புகழந்தோ, நியாயப்படுத்தியோ பேச வேண்டாம். அவர்களை பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், தீவிரவாதிகள் என்று எழுதியும் பேசியும் இழிவு படுத்தாமலாவது இருக்கின்றனவா?இல்லையே!

நிலைமை இப்படியிருக்க, எம்மில் சிலர் சமூக வலைத்தளங்களில் JVP இனரின் நினைவு நாளையும் அநுரவின் தலைமையிலான நினைவு நிகழ்வையும் பதிவிட்டும் புகழ்ந்தும் புலம்புவதை பார்க்கையில், எம்மவர்களின் அறிவையும் இன உணர்வையும் என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

images/content-image/1763054177.jpg

"வாழ்கின்ற காலம்வரை
வாழ்த்துங்கள் (போற்றுங்கள்) எம் வீரர்களை;
பிறர்க்கென உயிர்க்கொடை
கொடுப்பது தெய்வீகம்”

நன்றியுடன்
சூரி சின்னத்துரை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!