அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நுகேகொடை பேரணியில் இணைவர்!
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்பு பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
“கடந்த காலங்களில், SLPP க்குள் விவாதங்கள் நடத்தப்பட்டன, ஆனால் இன்று பேரணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்துள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் பேரணியில் இணைவார்கள் என சுட்டிக்காட்டிய அவர், SLFP மற்றும் UNP ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.