வடக்கில் தாதியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: அவதிக்குள்ளாகும் நோயாளர்கள்

#SriLanka #Hospital #strike
Mayoorikka
1 hour ago
வடக்கில் தாதியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: அவதிக்குள்ளாகும் நோயாளர்கள்

வட மாகாணத்தில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கதினர் இன்று காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் வௌியேறும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வட மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

 வடமாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தாதியர்களால் மேற்கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 அதன்படி குருதி மாதிரிகளை பெறுதல், ஊசி போடுதல், உள்ளிட்ட தாதியர்களினால் வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோயாளர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!