தோட்ட தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் வழங்குவது சட்டவிரோதமானது!
தனியார் துறையில் பணியமர்த்தப்பட்ட எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தினசரி கொடுப்பனவாக 200 ரூபாய் வழங்குவதற்கான முன்மொழிவு தொடர்பில் விமர்சனம் எழுந்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்த இந்த முன்மொழிவின் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் பொது நிதி குழு (COPF) விவாதித்துள்ளது.
இதற்கமைய தொழிலாளர்களின் அன்றாட வருவாயை 1,750 ரூபாயாக உயர்த்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். ஒரு எஸ்டேட் தொழிலாளியின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 1,350 ரூபாய் ஆகும்
. ஜனவரி 2026 முதல் ஒரு நாளைக்கு 1,550 ரூபாயாக ஊதியத்தை அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார். மேலும், அவர்கள் தினமும் வேலைக்குச் செல்வதற்கான ஊக்கத்தொகையாக அரசாங்கத்தால் தினமும் 200 சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பில் விவாதித்த கோப்குழு 200 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவது சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
