கலைமாமணி டாக்டர் வி.கே.ரி.பாலனின் ஓராண்டு நினைவு நாள்
உலகத் தமிழ் உறவுகளின் இதயம் நிறைந்த, சென்னை Madura Travel Service (P) Ltd இயக்குநர் 'கலைமாமணி' டொக்ரர் வி.கே.ரி.பாலன் (வி.கே.தனபாலன்) அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்து ஓராண்டு கடந்து விட்டது.
நண்பர் கோவை நந்தன் அவர்களுடன் 1987ல் தமிழ்நாடு சென்று மீள் அறிமுகமாகிய நட்பு, 2024 நவம்பர் 11 வரை தொடர்ந்தது.

உழைப்பால் உயர்ந்த வி.கே.ரி.பாலன், எல்லோருக்கும் ஒரு பாடப் புத்தகம். தனது வாழ்க்கைப் பயணத்தை அவர் நிறைவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
உலகத் தமிழ் மக்களுக்கு உதவிய கரம். தமிழகக் கலைஞர்கள் உலகெங்கும் வலம் வர உயர்வான பணியாற்றிய உன்னத மனிதர்.
பிரயாண முகவர் பணியில் மிகவும் உச்ச நிலையை அடைந்தார்.

சுற்றுலாத் தொடர்பான மாநாடுகளின் பிரதம அதிதியாகப் பேச்சாளராக விளங்கினார். வாழ்க்கையில் உயரங்களைத் தொட்ட பொழுதிலும் வந்த வழியை மறக்காது அதனை மீண்டும் மீண்டும் மீட்டிவந்தார்.

வி.கே.ரி.பாலன் அவர்கள் இல்லாத சென்னையை நினைத்துப்பார்க்க முடியவில்லை! பல்லாயிரக்கணக்கானோரின் அன்றாட பயணங்களுக்காகப் பணியாற்றி வந்த வி.கே.ரி.பாலன் இன்றில்லை என்பது எம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது!

உங்கள் நினைவுகள் எம் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்!
முகநூல் பதிவு
எஸ்.கே.ராஜென்
(வீடியோ இங்கே )