காற்றின் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு - வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்புகள் உயர் மட்டங்களை எட்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, வடகிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150 அலகுகளாக அல்லது சற்று சாதகமற்ற நிலையில் இருப்பதாக அவ் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
எல்லைகளுக்கு இடையே ஏற்படும் காற்று சுழற்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் வளிமாசடைவு அதிகரித்துள்ளதாகவும் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை இப்போது ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் இது குறித்த தகவல்களைப் பெறும் திறன் கொண்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளில் குறியீட்டு மதிப்பு 150 - 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
