மேல் மாகாணத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களில் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 8 மற்றும் 9 ஆம் திகதிகளில், மேல் மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
