ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழப்பு: யாழில் சோகம்

#SriLanka
Mayoorikka
2 hours ago
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழப்பு: யாழில் சோகம்

கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார்.

 அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அண்மைக்காலமாக சிசுக்களைப் பிரசவித்த பின்னர் இளம் தாய்மார்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!