அநுராதபுரத்தில் கொள்ளையனால் கண் பார்வையை இழந்த பெண்
அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால்,அவர் தனது பார்வையை இழந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் தற்போது தனது பார்வையை இழந்துள்ளார். சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண், அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

கல்னேவ, தம்புத்தேகம, இபலோகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் உட்பட பல இடங்களில் சந்தேக நபர் கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இரவும் பகலும் சுற்றித் திரிந்த இந்தக் கொள்ளையனின் நடவடிக்கைகள் பல நாட்களாக அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
கைதான நபரிடம், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸா் பறிமுதல் செய்தனர்.
(வீடியோ இங்கே )