பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது!
#SriLanka
Mayoorikka
1 hour ago
எப்பாவல பகுதியில் பாடசாலையின் அதிபர், அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயின் கையிருப்புடன் கைது செய்துள்ளனர்.
எப்பாவல - தெடகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய தேசிய திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
