பருத்தித்துறையில் பல உணவகங்களுக்கு தண்டப்பணம் அறவீடு!

#SriLanka
Mayoorikka
2 hours ago
பருத்தித்துறையில்  பல உணவகங்களுக்கு  தண்டப்பணம் அறவீடு!

உணவகங்களில் உள்ளக பயன்பாட்டின் போது லஞ்ச் சீற் பாவனை மற்றும் திண்மக் கழிவுகளை தரம்பிரிக்காமைக்காக பருத்தித்துறையில் உள்ள ஒன்பது உணவகங்கள், வெதுப்பகங்களிற்கு பருத்தித்துறை நகரசபையினால் 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

 பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் நகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இணைந்து பருத்தித்துறை நகரில் உள்ள உணவகங்களில் கடந்த தினத்தில் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர். 

 இதன்போது மூன்று உணவகங்களில் உள்ளக பாவனையின் போது லஞ்ச் சீற் பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டது.

 குறித்த உணவக உரிமையாளர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் தண்டப்பண தொகையினை செலுத்தியுள்ள நிலையில் இரு உணவக உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறிவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் ஆறு உணவகங்கள், வெதுப்பங்களில் திண்மக்கழிவுகளை தரம்பிரிக்காது பேணியமை, நகர பிதாவின் பிரசன்னத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடைகளுக்கும் தலா ஐயாயிரம் ரூபா என முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

 இதேவேளை, பருத்தித்துறை நகரசைப எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி முதல் திண்மக் கழிவுகளை தரம்பிரித்து வைக்கப்படாத பட்சத்தில் முதல் தடவையாக ஐயாயிரம் ரூபாவும், இரண்டாவது தடவையாக பத்தாயிரம் ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்படும் எனவும் மூன்றாவது தடவையாகவும் அவ்வாறு செயற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டநடவடிக்கைக்கு எடுக்கப்படும் எனவும், கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் உணவகங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை மீறும் உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மேற்குறித்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரபிதாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!