வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை கணவனும் குழந்தையும் மாயம்!!

#SriLanka #Vavuniya #Death #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை கணவனும் குழந்தையும் மாயம்!!

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

                                                                                  

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!