நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது!
#SriLanka
Mayoorikka
3 hours ago
நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கோண்டாவில் பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
