ஜெய்சங்கரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர் - மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார்.
இதன்போது "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையின் கீழ் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
"இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் @sajithpremadasa-வைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-இலங்கை உறவுகள் மற்றும் நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை குறித்து விவாதித்தோம். இலங்கையில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்" என்று ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசிய எதிர்கட்சி தலைவர். , இந்த விஷயத்தைத் தீர்க்க சர்வதேச சட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு சரியான, செயல்படக்கூடிய கட்டமைப்பை நிறுவ இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
