இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர்!

#SriLanka
Mayoorikka
4 hours ago
இலங்கைக்கு வருகை தந்த  ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி இன்று (04) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

 அவர் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவுள்ளார்.

 இந்தக் கூட்டத்தில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடனும் அவர் இணைந்து தலைமை வகிப்பார். 

 மேலும், வருகை தந்துள்ள இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அத்துடன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்கவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

 மத்திய கிழக்கில் இலங்கையின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளிகளில் ஐக்கிய அரபு அமீரகம் ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 7வது பெரிய ஏற்றுமதி நாடாக அது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கில் ஒரே ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களைக் கொண்ட நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!