நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு! யாழில் பரிதாபம்

#SriLanka #Accident
Mayoorikka
5 hours ago
நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு! யாழில் பரிதாபம்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

 மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி, வீதியில் விழுந்தவேளை, வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யூடியூப் தளமொன்றில் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த திறமையான ஒரு கலைஞன் என தெரிவிக்கப்படுகின்றது. 

 உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!