செம்மணி மனிதபுதைகுழி அடுத்த வருடம் மீண்டும் அகழ்வுப் பணிகள்!
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிப் பகுதிகள் மழை நீரால் நிரம்பியுள்ளதால் மீண்டும் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனிதகுழி வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கையடுத்து செம்மணி மனிதபுதைகுழிப் பகுதிக்கு துறைசார் அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் களவிஜயத்தை மேற்கொண்டனர்.
அதனையடுத்து நீதிமன்றில் வழக்கு தொடர்பில் முன்வைக்கபட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட சான்றுப்பொருளான பாதணிகள் அனைத்தும் 1980ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் காணப்பட்டதாக இருக்கலாம் என்று ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
