எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும்!
2028ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி முழுமையாக நிறுத்தப்படும் என கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிக்குட்பட்ட பிரதான நீர்பாசனகுளமான நவகிரி ஆற்றைகுறுக்கிட்டு அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு மற்றும் அணைக்கட்டுடனான பாலத்துடன் கூடிய அணைக்கட்டு என்பனவற்றின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.
நவகிரி ஆற்றைக்குறுக்காக மக்களினதும் விவசாயிகளினதும் போக்குவரத்தினை இலகுவடுத்தும் வகையில் கண்ணியம்மை மற்றும் கல்வெட்டை அணைக்கட்டுக்கு இடையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பொருட்டு நவகிரி ஆற்றுக்கு குறுக்காக அமைக்கப்பட்ட பாலத்துடன் கூடிய அணைக்கட்டு திறந்துவைக்கப்பட்டது.
கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் 86.9 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த அணைக்கட்டு,அணைக்கட்டுடன் கூடிய பாலம் திறந்துவைக்கப்பட்டது. நீர்பாசன பணிப்பாளர் நாயகம் எந்திரி. அஜித் குணசேகர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,நீர்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பொறியியலாளர் இப்ராஹீம்,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் மட்டக்களப்பு இணைப்பாளர் திகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதி மக்களும் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகளும் நன்மையடைவார்கள் என இங்கு தெரிவிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய அமைச்சர், 2028ஆம் ஆண்டு நமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் தேவையை முற்றிலுமாக நீக்க திட்டமிட்டுள்ளோம், இறக்குமதியினால் அதிகளவான பணத்தினை செலவிடுகின்றோம்.இந்த நிலைமையினை மாற்றி எமது பகுதியில் உற்பத்திகளை அதிகரித்து இறக்குமதியை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
விவசாயத்துறையின் வழிகாட்டுதலுடன், நாட்டிற்குத் தேவையானவற்றைப் பயிரிடவும், தேவைக்கேற்ப அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் கடுமையாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். அரசாங்கத்தின் பொறுப்பு அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதுதான், வேறு எதுவும் இல்லை. நான் ஒரு இலங்கையன், இலங்கையில் முதல் முறையாக திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் ஒழிக்கப்பட்ட ஒரு அரசியலை நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம்.
இந்த செயற்பாடுகளை நாங்கள் நிறுத்தப்போதில்லை.இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றும் வரையில் எமது செயற்பாடுகள் நடைபெறும்.இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளும் ஊழல் மோசடிகளும் துடைத்தெறியப்படும். நிலையான வளர்ச்சி என்பது நமது ஆறுகளை காப்பாற்ற வேண்டும், கால்வாய்களை காப்பாற்ற வேண்டும், ஏரிகளை காப்பாற்ற வேண்டும், மணலை காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.
எனவே, அற்கு நல்ல நிர்வாகத்துடன் செய்யப்பட வேண்டும், ஆனால் இந்த நதியைப் பார்க்கும்போது, நீங்கள் அதை தெளிவாகக் காணலாம். அது நடக்கவில்லை,இப்போது நாம் அதை மாற்ற வேண்டும், சரியான மற்றும் ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். இப்போது நாம் அதற்குத் தேவையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம்.
காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, ஆறுகள் அழிக்கப்பட்டுள்ளன, அனைத்தும் இடிந்து விழுந்துள்ளன, எனவே நான் முன்பு சொன்னது போல் நாம் மகிழ்ச்சியாக வாழ இதை சரிசெய்ய வேண்டும், ஆனால் இது ஒரு பெரிய பணி. நாட்டின் பொருளாதாரப் பக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும், அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் இருந்து எண்ணெய் வருவதில்லை, பால் பவுடர் பந்துகளில் இருந்து வருவதில்லை. பணம் ஒதுக்கப்பட்டு முறையாகச் செலவிடப்பட வேண்டும். நம்மிடம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் மக்கள் உள்ளனர். மூவரும் ஒரு நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டுள்ளனர். நாம் உழைத்தால், குறுகிய காலத்தில் இந்தப் பொருளாதாரம் நமக்குக் கிடைக்கும்.
சிரமங்களைத் தீர்க்க முடியும். போதைப்பொருள் கலாசாரம் அனைத்து இடங்களிலும் வியாபித்து காணப்பட்டது.அது பல்கலைக்கழகங்களும் அந்த நிலையை அடைந்துவிட்டன, அது ஒரு தொற்றுநோய் போல பரவி, சமூகம் சரிந்துவிட்டது.
இப்போது அதையும் குணப்படுத்தத் தொடங்கிவிட்டோம். அடுத்து, கலாச்சார அம்சத்தில் கவனம் செலுத்துவோம். என்று தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
