21 மில்லியன் மதிப்புடைய குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 hours ago
2.7 கிலோகிராம் 'குஷ்' கஞ்சாவை நாட்டிற்குள் கடத்த முயன்ற 28 வயதுடைய நபர் ஒருவர் இலங்கை சுங்கத்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட 'குஷ்' போதைப்பொருள், ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NCU இன் முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
