வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் பால் ரிச்சர்ட் இலங்கை வருகிறார்!
வத்திகான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (03) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இன்று முதல் 08 ஆம் திகதிவரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் புனித ஆயருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு. விஜித ஹேரத்துடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார்.
இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நினைவு விழா கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறும்,
அங்கு பேராயர் கல்லாகர் ஒரு பிரசங்கம் செய்ய உள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடுவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
