இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #Lanka4
Prasu
8 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

மேஷம் ராசியினருக்கு 4-ல் உள்ள உச்ச குரு 12-ல் உள்ள சனியை பார்ப்பது, ராசியாதிபதி 8-ல் ஆட்சி பெறுவது, 7-ல் சுக்கிரன் பலமாக இருப்பது ஆகியவற்றால் வெளிநாட்டு பணி, தொழில் குறித்த சுபச்செய்திகள் வரும்.

தொழில் துறை, வியாபாரத்தில் முதலீடு செய்யும் பங்குதாரர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பணி கிடைக்க பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட்டில் தனியார் நிறுவன பங்கு மூலமும் லாபம் பெறலாம். மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர்.

கண்வலி, எரிச்சல், நீர் வடிதல், கால்வலி ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு அகலும். உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற வரை அன்னதானம் பொருளுதவி செய்வது நன்மை தரும்.

ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு 11-ம் உள்ள சனியை பலமான குரு பார்ப்பதாலும், 6-ல் ராசியதிபதி வலுவாக இருப்பதாலும் பழைய கடன்கள் தீரும். புதிய கடன்கள் வந்து சேரும். தைரியமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறலாம்.

தொழில் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பான செயல் திறனை வெளிக்காட்டுவார்கள்.

ரியல் எஸ்டேட்டில் புதிய மாற்றங்கள் மூலம், ஷேர் மார்க்கெட்டில் தனியார் நிறுவன பங்குகளாலும் லாபம் உண்டு. மாணவர்கள் மாமா, மாமா வழி உறவினர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்.

இடுப்பு, வயிறு ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பெருமாள் கோவில் தாயாருக்கு தாமரை மலர் சமர்ப்பணம் செய்வதும், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதும் நன்மை தரும்.

மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு 2-ல் உச்ச குரு, 10-ல் உள்ள சனியை பார்ப்பது, 5-ல் சுக்கிரன் ஆட்சி பெறுவது ஆகிய கிரக அமைப்புகள் திடீர் யோகத்தை தரும். ராசியதிபதி பகை வீட்டில் இருப்பதால் எதிலும் அவசரம் கூடாது.

தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் புதிய முதலீடுகளை செய்து தொழில் விருத்தி செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உயர் அதிகாரி ஆதரவால் நன்மை பெறுவர்.

ரியல் எஸ்டேட் சுறுசுறுப்பு அடையும். ஷேர் மார்க்கெட்டில் நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான நல்ல சூழல் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்து பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள்.

அஜீரணம், வாயுத்தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் நீங்கும். வைஷ்ணவ அடியார்களுக்கு பொருள் தானம், இரவில் தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குவது பல நன்மைகளைத் தரும்.

கடகம்

கடகம் ராசியினருக்கு 4-ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் பெண்களால் ஆதாயத்தையும், வீடு, மனை வாகனங்களால் மன மகிழ்ச்சியையும் தருவார். எந்த விஷயத்திலும் நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் சவாலான பிரச்சினைகளை சந்தித்து சரி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த சிக்கல் ஒன்று விலகி எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களாலும், ஷேர் மார்க்கெட்டில் வாகன நிறுவன பங்குகளிலும் லாபம் உண்டு. மாணவர்கள் செஸ், ஷட்டில்காக் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் சாதனை படைப்பார்கள்.

பருவநிலை மாற்றங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் சீராகும். இயன்றவரை காலை 6-7 மணிக்குள் பாலில் தேன் கலந்து வேப்பமரத்தை வலம் வந்து வேரில் ஊற்றி, வணங்க நன்மை தரும்.

சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு ராசி அதிபதி பலவீனமாகி, சுபர் சேர்க்கை பெறுவதால் காரிய வெற்றி கிடைக்கும். பேச்சில், இனிமை வசீகரம் கூடும். தகவல் தொடர்பு மூலம் நல்ல பல செய்திகள் வந்து சேரும்.

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் தக்க விளம்பரங்கள் செய்யும் அளவுக்கு விற்பனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகம் அல்லது மேலதிகாரிகளின் ஆதரவு அமோகமாக உண்டு.

ரியல் எஸ்டேட்டில், ஷேர் மார்க்கெட்டில் நிதி வரவு-செலவு அதிகமாகும். தொழில் வளர்ச்சி பெறும். மாணவர்கள் பயிற்சி பட்டறை மூலம் தனித்திறன்களை வளர்த்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

உடல் அசதி, தோள்பட்டை, கை-கால் வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். சிவலிங்கம் அல்லது பைரவருக்கு மாலை நேரங்களில் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது, கடல், புண்ணிய நதியில் நீராடுவது நன்மை தரும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு 2-ல் தனாதிபதி ஆட்சி பெறுவதால் செல்வாக்கும், சொல்வாக்கும் ஏற்படும். 3-ல் உள்ள ராசியதிபதி பகை வீட்டில் சஞ்சரிப்பதால் பயணத்தில், தகவல் தொடர்புகளில் நிதானம் தேவை.

தொழிலும், வியாபாரம் ஆகியவற்றில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வீடு, மனை யோகம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட்டில் புதிய வர்த்தக தொடர்புகளால் நன்மை ஏற்படும். மாணவ, மாணவியர் கலை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகள் பல கிடைக்க பெறுவர்.

வாய், தொண்டை, பல் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் பசுவுக்கு வெண்பூசணி உண்பதற்கு அளிப்பதும், தாய், தந்தையிடம் ஆசிகளை பெறுவதும் நன்மைகள் பல தரும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு ராசியதிபதியுடன், லாபாதிபதி இணைவதால் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத தன யோகம் உண்டு. குடும்ப, பாக்ய அதிபதிகள் இணைவு திருமணம், குடும்ப விஷயங்களில் நன்மை தரும்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களாலும், ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்களிலும் லாபம் உண்டு. மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புதிய தொழில்நுட்பம் அல்லது படிப்பை கற்கும் வாய்ப்பு ஏற்படும்.

மனக்குழப்பம், ஜீரண கோளாறு, உடல் அசதி ஓய்வு எடுப்பதால் விலகும். சமீபத்தில் மணமான தம்பதிக்கு பரிசு வழங்குவது, பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குவது நன்மை பல தரும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு பாக்கியத்தில் குரு உச்சமடைவதால் பொருளாதார நிலையில், உறவுகளிடையே உயர்வு ஏற்படும். வெளியூர் திருத்தல தரிசனங்கள் உண்டு.

தொழிலிலும், அரசியல், வியாபாரத்திலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். சிலர் வெளிநாடு செல்வர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களாலும், ஷேர் மார்க்கெட்டில் மருந்து உற்பத்தி நிறுவன பங்கு மூலமும் லாபம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்ப கற்றலுக்காக வெளியூர், வெளிநாடு செல்வர்.

தூக்கமின்மை, கண்ணில் நீர் வடிதல், உடல் அசதி ஏற்பட்டு மருத்துவம் மூலம் குணமடையும். தாயார், தாய் வழி உறவினர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து பெறுவதும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதும் நன்மை தரும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு 8-ல் உச்சம் பெற்ற ராசியதிபதி 4-ல் உள்ள தனாதிபதியை பார்ப்பதால் விவசாய பூமி, மண்மனை யோகம் ஏற்படும். ஒரு சிலர் கடன் பெற்று வீடு, வண்டி வாகனங்களை வாங்குவர்.

வியாபாரம், தொழில் ஆகியவை புதிய வேகம் பெறும். அரசு தரப்பு ஆதாயம், பெரிய மனிதர்கள் தொடர்பால் வர்த்தகம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஏற்படும்.

ரியல் எஸ்டேட்டில், ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகளை செய்வது எதிர்பாராத ஆதாயத்தை அளிக்கும். மாணவர்கள் புதிய நண்பர்கள், தொடர்புகள் மூலம் எதிர்கால நலனுக்குரிய விஷயங்களை அறிவார்கள்.

தைராய்டு, நீரிழிவு, பிரஷர் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தக்க சமயத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். சிவலிங்கத்துக்கு சந்தன அபிஷேகம், செண்பக மலர் சமர்ப்பணம் செய்தால் நன்மைகள் பல உண்டு.

மகரம்

மகரம் ராசியினருக்கு 7-ல் உள்ள உச்ச குரு 3-ல் உள்ள ராசியதிபதியை பார்ப்பதால் நல்வாழ்க்கைக்குரிய புதிய பொறுப்புகள் ஏற்படும். 10-ல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் செல்வாக்கு உயரும்.

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நீண்ட காலமாக எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிட மாற்றம் அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

ரியல் எஸ்டேட்டில், ஷேர் மார்க்கெட்டில் அனுபவஸ்தர்கள் ஆலோசனை பெற்று முதலீடு செய்தால் நல்ல லாபம் உண்டு. மாணவியர்கள் புதிய சாதனை செய்து ஆசிரியர், பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள்.

கைகால் மூட்டு வலி, தலைசுற்றல், தோல் பாதிப்பு ஏற்பட்டு விலகும். அசைவ உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பதாலும், ஆதரவற்ற முதியவர்களுக்கு அன்னதானம் செய்வதாலும் நன்மைகள் பல ஏற்படும்.

கும்பம்

கும்பம் ராசியினருக்கு உச்சம் பெற்ற தனாதிபதி, 2-ல் உள்ள ராசியதிபதியை பார்ப்பதால் குடும்ப பொருளாதாரம், சமூக மதிப்பு ஆகியவை மேம்படும். செலவு அதிகமானாலும் அதற்கேற்ற வரவு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த பலவித தடைகள், சிக்கல்கள் அகன்று வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்கள் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் தொழில்நுட்ப பயிற்சி பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையிலும், ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடுகளுக்கு ஏற்ற ஆதாயம் நிச்சயம் உண்டு. மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல், நிதியுதவி கிடைக்கப் பெறுவர்.

அலைச்சல், கை-கால் அசதி பிசியோதெரபி சிகிச்சையால் விலகும். பைரவருக்கு பேரீட்சை, தேன், மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுவது, முதியோருக்கு உங்கள் கைகளால் உணவளிப்பது ஆகியவை நன்மை தரும்.

மீனம்

மீனம் ராசியினருக்கு 5-ல் உச்சமாக உள்ள ராசி அதிபதி, ராசியை, அதில் உள்ள சனியைப் பார்ப்பதால் காரிய தடைகள் விலக்கி நன்மை ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கை ஒளிவிடும். பயம் விலகும்.

தொழில் துறை, வியாபாரம் ஆகியவற்றில் செய்த முதலீடு, விற்பனை நிலவரம் எதிர்பார்த்த லாபத்தை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமைக்கேற்ற, நன்மை கைமேல் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட்டில், ஷேர் மார்க்கெட்டில் நிதானமாக முதலீடு செய்வதற்கு ஏற்ப எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி அடைவர்.

மன அழுத்தம், காய்ச்சல், சளி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசு பொருட்களை வழங்குவதும், அம்பிகை சன்னதியில் வெண்பொங்கல் பிரசாதமாக வழங்குவதும் நன்மை தரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!