அச்சுறுத்தல்கள் இருந்தால் மாத்திரமே எம்.பிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய விளக்கமளித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வெறுமனே கோரிக்கையின் பேரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தானியங்கி உரிமை அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட ஒவ்வொரு நபரும் ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அதன்படி பாதுகாப்பு வழங்கப்படும் என மேலும் கூறினார்.
எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றால், நாங்கள் எந்த காவல்துறையினரையும் வழங்க மாட்டோம்" என்று ஐஜிபி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
