காணிக்கு பாதை இல்லை என்றால் என்ன செய்வது? - சட்ட ஆலோசனை
உங்களுடைய காணி (Land) செல்வதற்கு ஒரு வழியில்லா காணியாக இருந்தால் அதாவது, பொது பாதைக்கு செல்ல வழி இல்லாத காணி என்றால், சட்டம் அதற்கான தீர்வை நியாயமாக வகுத்து கூறுகிறது.
நிலத்திற்கான நியாயச் சட்டம் மற்றும் பாவிப்பு உரித்துச் சட்டம் (Prescriptive Easements & Right of Way Law) மற்றும் Land Development Ordinance ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு காணிக்கான பொது பாதைக்கு செல்லும் வழி இல்லையெனில், அயற்காணிக்காரர் (Neighbouring Land Owner) தனது காணியிலிருந்து போக்குவரத்திற்கான ஒரு நியாயமான பாதையை விடுவித்துக் கொடுக்க வேண்டிய சட்டபூர்வ கடமை உடையவர்.
Case Reference: நீதிமன்றம் தெளிவாக கூறியது. “A landlocked property owner has a legal right to demand reasonable access through adjoining land, provided compensation is paid if necessary.”
அதாவது போக்குவரத்துக்கு வழியில்லாத காணியாளர், அயற்காணிக்காரரின் காணியில் வழி கோரலாம், ஆனால் நியாயமான நஷ்ட ஈட்டுச்செலவு குறித்த காணி உரிமையாளருக்கு வழங்க வேண்டும்.
உங்கள் காணிக்கு பொது பாதை இல்லையெனில், நீங்கள்: முதலில் அயற்காணிக்காரருடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துங்கள். மறுத்தால், District Court-இல் “Right of Way” பாவிப்பு உரித்து கோரி வழக்கு தொடுக்கலாம். நீதிமன்றம் ஒரு சமநிலைத் தீர்வு வழங்கும். அதாவது, தேவையான அளவு பாதை மட்டும் விடப்படும்.
சட்ட அடிப்படை (Legal Basis):
இத்தகைய சூழ்நிலைகள் தொடர்பாக “Easement of Necessity” (அவசியமான வழிச்செலுத்தல் உரிமை) என்ற கொள்கை Roman-Dutch Law மற்றும் Sri Lankan Civil Law அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் (Relevant Legal Provisions) :
1. Roman-Dutch Law Sri Lanka வில் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்கிறது.
2. Land Development Ordinance :
“Where any allotment of land is without access to a public road, the owner may be granted a right of way over adjoining lands, provided such access is necessary for the reasonable enjoyment of the land.”
3. Easements Ordinance (No. 3 of 1900) – Section 4 & Section 13:
“An easement of necessity shall arise only when a land is entirely shut off from public access, and shall continue only so long as such necessity exists."
அதாவது ஒரு காணி முழுமையாக பிற காணிகளால் சூழப்பட்டு, பொதுப் பாதைக்கு அணுகல் இல்லையெனில், அத்தகைய காணியின் உரிமையாளருக்கு அவசிய வழிச்செலுத்தல் உரிமை (Right of Way) கிடைக்கும்.
இந்தச் சட்டத்தின் நோக்கம், நில உரிமை இருக்க, பயன்பாட்டு உரிமை இல்லாத சூழல் ஏற்படாதபடி தடுப்பதே. அதனால், வழியில்லாத காணி (landlocked property) அமைந்தால், அதற்குச் செல்லும் ஒரு “reasonable access path” நியாயமான பாதையாக பாவிக்க வழங்கப்படல் வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்புகள் (Case Law):
1. நீதிமன்றம் தீர்மானித்தது: “When a land is completely surrounded by other lands and has no access to a public road, the owner of that land is entitled to a right of way over adjoining lands.”
அதாவது வழியில்லாத காணிக்காரருக்கு அயற்காணியின் வழியாக செல்லும் உரிமை உண்டு.
2. நீதிமன்றம் கூறியது: “The right of way of necessity must be the least burdensome route to the servient land."
அதாவது பாதை குறைந்தபட்ச இழப்பை மட்டும் அயற்காணிக்காரருக்கு ஏற்படுத்த வேண்டும்.
3. தீர்ப்பு: “The easement of necessity continues only so long as the necessity exists.”
அதாவது, புதிய சாலை அல்லது வழி அமைக்கப்பட்டால், பழைய வழிச்செலுத்தல் உரிமை தானாகவே நிறைவடையும்.
நடைமுறை நடவடிக்கைகள் (Procedure):
1. பொதுப்பாதைக்கா வழிப்பாதை இல்லையென நிரூபிக்க வேண்டும்.
2. பாதையின் அவசியத்தை விளக்க வேண்டும்.
3. அந்தப் பாதை அயற் காணிக்காரருக்கை குறைந்த இழப்பை ஏற்படுத்தும் என நீதிமன்றத்தை நம்ப வைக்க வேண்டும். நீதிமன்றம் நியாயமென கருதினால் இழப்பீடு வழங்குமாறு கோரலாம்.
4. தேவையான பட்சத்தில் District Court வழியாக “Declaration of Easement of Necessity” கோரலாம்.
சுருக்கமாகச் சொன்னால்:
“ஒரு காணி முற்றிலும் வழியில்லாமல் இருந்தால், அயற்காணிக்காரர் சட்டப்படி அவசியமான அளவு பாதையை விட்டுத்தர வேண்டிய கடமை உடையவர்.”
(வீடியோ இங்கே )