நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகளுக்கு தடை!
#SriLanka
Mayoorikka
1 month ago
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
