ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி மோசடி!

#SriLanka
Mayoorikka
16 hours ago
ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி மோசடி!

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். 

 சந்தேகநபர் நேற்று (31) நுகேகொடை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 400க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு-1 மேற்கொண்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் இது குறித்து 117 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

 விசாரணைகளின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த நபர்களிடமிருந்து குறித்த முகவர் நிலையம் 850,000 ரூபா முதல் 1,850,000 ரூபா வரையான தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!