பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது! நாமல்

#SriLanka
Mayoorikka
1 month ago
பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது! நாமல்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்க்கட்சிகள் சுப நேரத்திற்காக காத்திருக்காமல் பொதுமக்களுக்காக ஒன்றுபட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

 ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

 நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகிறது. 

 குறிப்பாக ராஜபக்ஷர்களை எந்த வகையில் நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்பதற்கு அரசாங்கம் அதிக காலத்தை செலவிடுகிறது. எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். 

அப்போது தான் எமக்கு அடுத்த தேர்தல்களில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் முன்னிலையாகலாம் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!