அரசாங்கம் வழங்கும் காணி ஆவணங்கள்? - சட்ட ஆலோசனை

#SriLanka #government #Law #land
Prasu
7 hours ago
அரசாங்கம் வழங்கும் காணி ஆவணங்கள்? - சட்ட ஆலோசனை

அரசிடமிருந்து சட்டபூர்வமாக கிடைக்கக்கூடிய காணி ஆவணங்கள் எவை என்று தெரியுமா?

இலங்கையில் அரசகாணிகளுக்கு சட்டபூர்வமாக பெறக்கூடிய ஆவணங்கள் பலவகையாக உள்ளன. இவை அரசின் உரிமை (State ownership) நிலைத்திருந்தபடியே அல்லது பகுதியாக உரிமையளிக்கப்படும் வகையில் வழங்கப்படும். கீழே தெளிவாகப் பார்ப்போம்.

01. அனுமதி பத்திரம் (Permit)

சட்டம்: State Lands Ordinance No. 8 of 1947

அரசால் காணியில் தற்காலிகமாக குடியிருப்பு, விவசாயம் அல்லது வணிகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். Permit ஒரு சட்டபூர்வ ஆவணமாகும், ஆனால் காணிக்கு முழுமையாக உரிமையாளர் ஆவதில்லை.

நிபந்தனைகள்:

1. காணியை விற்பனை செய்ய முடியாது.
2. அரசின் அனுமதியின்றி மாற்ற முடியாது.
3. விதிமுறைகளை மீறினால் permit ரத்து செய்யப்படும்.

02. Grant (உரிமை வழங்கல் ஆவணம்)

சட்டம்: Land Development Ordinance No. 19 of 1935

இது நிலையான ஆவணம் அதாவது, அரசால் நிரந்தர உரிமை வழங்கப்படும். பொதுவாக LDO Grant என்று அழைக்கப்படுகிறது.

விசேட தன்மைகள் :

1. பெயர் குறிப்பிட்டப்பட்டு இருந்தால் வாரிசுகளுக்கு (Nominated Successors) மட்டுமே மரபுரிமை செல்கிறது.
2. அனுமதி இன்றி விற்பனை/அடமானம் வைக்க முடியாது.
3. காணி அரசின் கட்டுப்பாட்டில் தொடர்கிறது.

03. Annual Land Permit / Annual Tenancy

இது ஒரு வருட காலத்துக்கு வழங்கப்படும் அனுமதி. பெரும்பாலும் விவசாயம் அல்லது தற்காலிக குடியிருப்பிற்காக வழங்கப்படும். ஆண்டு தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

04. ஜெயபூமி (Jayabhoomi) / சுவர்ண பூமி (Swarna Bhoomi)/ ரண்பிம (Ranbima) ஆவணங்கள்

இவை அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உரிமை ஆவணங்கள். பெரும்பாலும் அரசின் நிலங்களை நீண்ட காலம் பயனடைந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை Grant வகைக்குள் வருகின்றன (Land Development Ordinance அடிப்படையில்).

05. Lease Agreement (குத்தகை ஒப்பந்தம்)

அரச நிலம் தனியார் நபருக்கு, நிறுவனத்துக்கு அல்லது மத அமைப்புக்கு குத்தகையாக (Lease) வழங்கப்படலாம்.

காலம்: 30/33, 50 அல்லது 99 ஆண்டுகள்.

விதிகள்: வாடகை, பயன்பாட்டு நோக்கம், ரத்து செய்யும் விதிகள் முதலியவை குறிப்பிடப்படும்.

06. நன்கொடை உறுதி (Deed of Gift) / அறுதி உறுதி (Deed of Transfer)

பொதுவாக அரசுக் காணிகளுக்கு இது பொருந்தாது. ஆனால் சில சட்டரீதியான மாற்றங்கள் அல்லது மாற்றுச் சட்டங்கள் (Special Acts or Cabinet Decisions) மூலம் அரசே deed மூலம் வழங்க முடியும் (உதா: Housing Schemes, Urban Development Projects).

நன்றி
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!