தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல்!
#SriLanka
Mayoorikka
1 month ago
கொழும்பில் தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது வியாபார நிலையம் ஒன்றில் உள்ளூர் உற்பத்தி அரிசி பொதிகளில் தரம் குறைந்த மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகளை பொதி செய்து விற்பனை செய்யமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அதிகாரிகள் அந்த அரிசி பொதிகளுக்கு சீல் வைத்து வழக்கு தொடுத்தனர்.
இந்த சட்ட விரோத நடவடிக்கையில் நுகர்வோர் பாரிய அளவில் பாதிப்படைந்ததுடன் வியாபாரிகள் கொள்ளை இலாபத்தை ஈட்டி வந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
