போதைப் பொருளை ஒழித்து கட்டுவோம் என உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி சாராய பார்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
6 hours ago
போதைப் பொருளை ஒழித்து கட்டுவோம் என உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி சாராய பார்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரத்தை இல்லாமல் செய்வோம் எனவும் அதற்கு எதிராக போராட தயார் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 இந்தநிலையில் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அவற்றுக்கு வழங்கப்படும் பெர்மிட்டுக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என பாமர மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 நாட்டில் தற்பொழுதும் பாடசாலைகள், ஊர்மனைகள், ஆலயங்களிற்கு அருகாமையில் அடுத்தடுத்து மதுபானசாலைகள் முழத்துக்கு முழம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை?

 போதைப்பொருளினால் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள், சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மதுபானத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்படாதா?

 உண்மையில் அதிகளவில் வீதி விபத்துக்கள், பெண்கள், சிறுவர்கள் பாதிக்கப்படுவது இந்த மதுபானம் பாவிப்பவர்களினால் தான். 

அதற்கு ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்? உண்மையில் இதற்கும் விரைந்து நடவடிக்கை எடுப்பாராயின் நாட்டில் அறவே போதை கலாச்சாரம் அடியோடு பிடிங்கி எறியப்பட்டதாக கருதப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!