மாங்குளம் வீதியில் தடம்புரண்ட பொலிஸ் ஜீப்: சில பொலிஸாருக்கு சிறு காயங்கள்

#SriLanka
Mayoorikka
3 hours ago
மாங்குளம் வீதியில் தடம்புரண்ட பொலிஸ் ஜீப்: சில பொலிஸாருக்கு சிறு காயங்கள்

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

 குறித்த வீதியில் பயணித்த பொலிஸாரின் ஜீப் வாகனத்தின் முன் திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்தினை சந்தித்துள்ளது.

images/content-image/1761842631.jpg

 இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சேதமடைந்த வாகனத்தை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் சமீபகாலமாக வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் அலைந்து திரிவது காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!