மன்னார், வவுனியா போன்ற பிரதேசங்களில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்! எப்பொழுது சட்டம் பாயும்?
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு அதிரடியாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை வழங்கி யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
எனினும் வடக்கில் ஏனைய பிரதேசங்களான முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது;
ஆனால் போலீசாரே அரசாங்கமோ இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
மன்னாரில் கடல் மார்க்கமாக அதிகளவில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் மற்றும் பல்வேறான குற்றச்செயலால் தொடர்ந்து நடந்த வண்ணனமுள்ளன.
இந்த நிலையில் பொலிஸாரோ, அரசாங்கமோ கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
