இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்படவிருந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை, தற்காலிகமாக தடை....
போதைப்பொருள் ஒழிப்புக்கான நாடு தழுவிய நடவடிக்கை, “தேசத்தின் ஒற்றுமை – தேசிய இயக்கம்” (Nation United – National Drive) என்ற பெயரில், இன்று (30) காலை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அனுசரணையில் கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை 10:00 மணிக்கு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட இருந்தது.
இந்த நாடு தழுவிய திட்டம், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் துஷ்பிரயோக தேசிய சபையுடன் (National Council On Drug Abuse) மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு குழுக்களின் கூட்டு அமலாக்க முயற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இருப்பினும், இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது
எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் சந்தேகிக்கப்படும் நபர்களை இணைப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இந்தத் திட்டம் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளது.
அப்பாவி குடிமக்களைத் தவறுதலாக அடையாளம் காண்பதைத் தவிர்க்க, சட்ட அமலாக்க உத்திகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
