செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Crime
Mayoorikka
1 month ago
செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் (வீடியோ இணைப்பு)

இஷாரா செவ்வந்திக்கு உதவி வழங்கியமை தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் இரண்டு விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன

. இஷாரா நாட்டில் தலைமறைவாக இருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை குறித்து மொத்தம் நான்கு விசாரணைக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

 இந்நிலையில், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகளும் ரவைகளும் மீட்கப்பட்ட சம்பவத்தில், வவுனியாவைச் சேர்ந்த 45 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அவர் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 அவரிடம் இருந்து ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இஷாராவிற்கு உதவி வழங்கியமை தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் மீதமுள்ள 3 பேர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!