இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் அபாயம்!
இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சத்தைச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளிடையே மலேரியா நோய்த்தொற்று அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 27 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்தபோது தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் அனைவரையும் மலேரியா பரிசோதனைக்குட்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது இரண்டு டெங்கு வைரஸ் வகைகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்றும், நுளம்பு இனப்பெருக்க இடங்களை ஒழிக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிக முக்கியம் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
