வெளிநாடு செல்லவிருந்த நிலையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு! கிளிநொச்சில் சம்பவம்

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 month ago
வெளிநாடு செல்லவிருந்த நிலையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு! கிளிநொச்சில் சம்பவம்

 கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.

 இந்நிலையில் இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்திருந்தனர். 

 இந்நிலையில் குறித்த இளைஞன் காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!