போதைவஸ்து பாவிப்பவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்!
இலங்கையில் தற்பொழுது போதைக்கு அடிமையாகி உள்ளவர்கள் அதிகமாகிக் கொண்டு செல்கின்றனர்.
மாணவர்கள் முதல் இளம் வயதினர், முதியர்கள், பெண்கள் என போதைக்கு அடிமையான கூட்டம் அதிகரித்துச் செல்கின்றது.
இவர்கள் போதைப் பொருளை பாவித்துவிட்டு கொலைகள், கற்பழிப்புக்கள், களவு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே மக்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விழிப்பாக இருப்பது கட்டாயமானது.
அத்துடன் மாணவர்கள் இது தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். யாரும் முகம் தெரியாதவர்களோ, வித்தியாசமாக செயற்படுபவர்களோ சாப்பிடுவதற்கோ அல்லது பொதிகள் போன்று எதாவது தந்தால்அவை தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
இவர்கள் தொடர்பில் பொலிஸிலோ அல்லது உங்கள் பெற்றோர்களோ, ஆசிரியர்களிடமோ தெரியப்படுத்த வேண்டும்.
கொலை குற்றவாளிகள் பல வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், போதைபொருள் பாவிப்பவர்கள், விற்றவர்கள், பாவித்தவர், பாவிப்பவர்களிடம் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
போதைக்காக எதையும் எப்பொழுதும் செய்வார்கள்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
