182 மில்லியன் ரூபா பெறுமான ஹஷிஷ் போதைப்பொருளுடன் கனேடியர் கைது
துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 21 வயதுடைய கனேடிய நாட்டு நபர் ஒருவர், 18.253 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (27) இரவு 10.30 மணியளவில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வந்த எமிரேட்ஸ் EK 648 விமானத்தில் வந்த பயணிகளை மேற்கொண்ட சோதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.\

குறித்த போதைப்பொருள் அவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.182.53 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகள் சுங்கத்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிடிபட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் விசாரணைப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
