இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்!
#SriLanka
#Central Bank
Mayoorikka
1 month ago
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் குறித்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் அவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய முறையே 2025.10.24 மற்றும் 2025.11.03 முதல் அமுலாகும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
