லசந்த கொலை துப்பாக்கிதாரியை அடையாளம் காட்ட உதவிய AI!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கித்தாரியை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடையாளம் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம – நாவின்ன பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி கடையிலிருந்து வெளியே வந்தபோது, AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அவரை அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த அதிகாரி உடனே தகவல் வழங்கி, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார்.
அதன்படி, விசாரணைக் குழுக்களால் பெறப்பட்ட துப்பாக்கித்தாரியின் படம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டு, விசாரணை அதிகாரிகளுக்குக் காட்டப்பட்டது. இதன் விளைவாக, துப்பாக்கித்தாரியை உடனடியாக அடையாளம் காண அந்த உளவுத்துறை அதிகாரிக்கு முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்கு முன்பே துப்பாக்கித்தாரி பயன்படுத்திய தொலைபேசி மற்றும் சிம் அட்டையின் நெட்வொர்க் பகுப்பாய்வே, இத்தகைய வேகமான கைது நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரியவந்துள்ளது
இந்நிலையில், துப்பாக்கிதாரி உட்பட ஆறு சந்தேக நபர்களை மேலும் விசாரிப்பதற்காக 72 மணி நேர தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
(வீடியோ இங்கே )
அனுசரணை
